tamilnadu

img

முறையாக குடிநீர் விநியோகம் செய்திடுக- பொதுமக்கள் மறியல்

கோவை, மே 27–ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கோவைசோமையம்பாளையம் பகுதியில்பொதுமக்கள் திங்களன்று சாலைமறியலில் ஈடுபட்டனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்டது சோமையம்பாளையம் பஞ்சாயத்து. இங்குள்ளதிருவள்ளுவர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் பாரபட்சம் நிலவுகிறது எனத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து மாவட்டஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை கோரிக்கை மனுகொடுத்து வந்தனர். முறையான குடிநீர் விநியோகம் கோரி தொடர் போராட்டமும் நடத்திவந்தனர். எனினும் கடந்த ஆறு மாதகாலமாக இதேநிலை நீடிப்பதால் இதற்கு தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று அப்பகுதியினர் சாலையின் குறுக்கே வாழை மரத்தை போட்டு, காலிக்குடங்கள் மற்றும்கைக்குழந்தைகளுடன் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், இப்பகுதிமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. அரசு அதிகாரிகளிடம் புகராளித்தும் எவ்வித பலனும் இல்லை. நாங்கள் குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய  சூழலுக்கு உள்ளாகியுள்ளோம். சாலை மறியலில் ஈடுபட்டால் மட்டுமே வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆகவே நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்மற்றும் சோமையம்பாளையம் பஞ்சாயத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.