tamilnadu

img

வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்

சேலம், ஜூன் 20- சேலம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து வணிக நிறுவ னங்களுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் விற்பனை செய்வதை கண்டித்து, லாரிகளை சிறைபி டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் குடிநீர் தட் டுப்பாடு கடந்த சில மாதங்களா கவே தொடர்ந்து நிலவி வருகி றது. குறிப்பாக கிராம பகுதிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தி னால், அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் இரும் பாலை அருகே உள்ள அழகு சமுத்திரம் ஊராட்சியில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இந்நிலையில், இப்பகு தியை சேர்ந்த சுப்பிரமணி என்ப வருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு ஆழ்துளை  கிணறு அமைத்து லாரிகள் மூல மாக வணிக நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண் ணீரை விற்பனை செய்து வந்த னர். ஆழ்துளை கிணறு அமைத்த தால் அங்கு உள்ள கிணறுகள் வற்றியதால், தண்ணீர் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரு வதாகவும், தண்ணீர் விற்ப னையை தடுத்து நிறுத்திட வேண் டும் என்று அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். ஆனால், இதுகுறித்து எந்த  வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், இரவு, பகலாக லாரிகள் மூலமாக தொடர்ந்து விற்பனை நடந்து வந்தது. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் வியாழனன்று காலை ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சென்ற இரண்டு லாரிகளை சிறைபிடித்து, காலிக் குடங்களுடன் லாரிகள் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், தண்ணீர் விற் பனையை தடுக்காத மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங் கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அங்கு  வந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தண்ணீர் எடுத்து சென்றவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணறு கள் அமைத்து, அதன் மூலமாக கிடைக்கும் நீரை, சேலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக் கும், தொழிற்சாலைகளுக்கும் கூடு தல் விலைக்கு விற்பனை செய்து  வருகின்றனர். ஆனால் உள்ளூ ரில் நிலவி வரும் தண்ணீர் பிரச் சனைக்கு எந்தவித உதவியும் செய்திடவில்லை. இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைப்பதினால், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றி லுமாக பாதிக்கப்பட்டு கிணறு கள் வற்றி உள்ளது. இதன் கார ணமாக விவசாயமும் பாதிக்கப் பட்டு உள்ளது என குற்றம் சாட்டி னர். மேலும், தண்ணீர் விற் பனையை தடுத்து நிறுத்தாவிட் டால் தொடர் போராட்டத்தி லும், மறியலிலும் ஈடுபட உள் ளதாகவும் அப்பகுதிமக்கள் தெரி வித்தார்.