tamilnadu

img

கொரோனா பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை வழங்குக - சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 15 – கொரோனா தொற்றுத் தடுப்புப் பணி யில் ஈடுபடும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவம், துப்புரவு, காவல் துறை, மின்சாரம், அங்கன்வாடி, ரேசன் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். கொரோனா நிவாரண நிதியை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கு உணவு, நிதி வழங்கி பாது காப்புடன் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் சிஐடியு மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பாக பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலை வர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செய லாளர் ஜி.மூர்த்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். திருப்பூர் தெற்கு நகரம் அரிசி கடை வீதியில் வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன், சுமைப்பணி தொழிலாளர் சங்கச்செயலா ளர் எம். ராஜகோபால், தையல் கலைஞர் கள் சங்க செயலாளர் சி. மூர்த்தி, ஆட்டோ சங்கத் தலைவர் டி.வி. சுகுமார், மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் டி. ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி, தெக்கலூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ராஜ், கனகராஜ், வேலுச்சாமி, பழனிச்சாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.