tamilnadu

img

விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7500 வழங்குக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 13–  விவசாய தொழிலாளர் குடும் பங்களுக்கு தலா ரூ.7500 வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி  கோரிக்கை மனுக்களை அளித்த னர். விவசாய தொழிலாளர் குடும்பத் திற்கு தலா ரூ.7500/- வழங்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி நூறு நாள் வேலை செய்திட அனுமதிக்க வேண்டும். 30  நாட்களுக்கான தினக்கூலியை நிவாரணமாக வழங்கிட வேண்டும்.  குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடு களையும், முகக்கவசங்களையும் கிராமங்களில் வழங்கிட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.500க்கான ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு  பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி  கோரிக்கை மனுக்களை அளித்த னர். கோவை பெரியநாயக்கன் பாளையம், சூலூர், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிக ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி, பொதுசெயலாளர் செல்வராஜ், பொருளாளர் திரு மலை சாமி, மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சேலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்குட்பட்ட விலாரிபாளையம், காட்டு வேப்பிலை பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கட்சியின் வாழப்பாடி தாலுகா செய லாளர் வீ.பழனிமுத்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கண்ணமநாயக்கனூரில் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணி யம் தலைமையிலும், உடுமலை சின்னவீரம்பட்டியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.பஞ்சலிங் கம் தலைமையிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதேபோல் ஊத் துக்குளி இச்சிப்பாளையத்தில் சங்க  தாலுகா தலைவர் ஆர்.மணியன்,  அவிநாசி வேலாயுதம்பாளை யத்தில் சங்க நிர்வாகி ஏ.சண்முகம் தலைமையிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உடுமலை ஜல்லிபட்டியில் கே.ரங்கராஜ், உடுமலை தின்னப் பட்டியில் ஆர்.மாசாணி, மடத்துக்கு ளம் கடத்தூரில் எஸ்.பழனிச்சாமி,  குடிமங்கலம் கொங்கல்நகரில் வி.தம்புராஜ், அவிநாசி வடுகபா ளையத்தில் எஸ்.மல்லப்பன், அவி நாசி செம்பியநல்லூரில் வி.பி.முரு கேசன், ஊத்துக்குளி நடுப்பட்டியில் தாலுகா செயலாளர் கே.பிரகாஷ், பல்லடம் மாணிக்காபுரத்தில் எஸ்.துரைசாமி உள்ளிட்டோர் தலைமை யில் மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.