tamilnadu

img

இடஓதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிடுக மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

பொள்ளாச்சி, பிப்.17- வன உரிமைச் சட்டம் 2006- ஐ  அமல்படுத்தி பழங்குடியின மக்க ளின் சமூக உரிமைகளை நிலைநாட் டிடக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி  அடுத்த ஆனைமலை தாலுகாவிற் குட்பட்ட ஆழியாரில் தோழர் வெள் ளிங்கிரி நினைவரங்கத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூன்றாவது தாலுகா மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு சங்கத்தின் ஆனைமலை தாலுகா  தலைவர் ஏ.அம்மாவாசை தலைமை  வகித்தார்.  தாலுகா செயலாளர் கே.பத்மினி வரவேற்று பேசினார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை  மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் மற்றும் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்தி உரை யாற்றினர். முன்னதாக, மாநாட்டில் வன உரிமைச் சட்டம் 2006ன் படி பழங் குடியின மக்களின் சமுதாய உரிமை களை நிலைநாட்டும் வகையில் அனுபவ நிலப்பட்டா வழங்க வேண் டும். மின்சாரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய  தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும், சம  வெளிப்பகுதிகளில் வசிக்கின்ற பழங் குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த நாகரூத்து மற்றும் கல்லாறு செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வீடுகள் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி மற்றும் உலாந்தி, மானாம்பள்ளி, டாப்சிலிப் வனச்சரகங்களிலுள்ள பழங்குடியின மக்களுக்கு பொதுக்கழிப்பிடம்,  மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை சமுதாய வசதிகளை உடன டியாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.  இதைத்தொடர்ந்து, இம்மாநாட் டில் மலைவாழ் மக்கள் சங்கத் தின் ஆனைமலை தாலுகா தலைவ ராக ஏ.அம்மாவாசை, செயலாள ராக கே.பத்மினி, பொருளாளராக பி.மாரப்பன் ஆகியோர் புதிய  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர்.