districts

img

குடியிருப்புகள்-விவசாய நிலத்திற்கு பட்டா வழங்குக மலைவாழ் மக்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 8- 2006 வன உரிமைச்சட்டப் படி கிருஷ்ணகிரி மாவட்ட மலை வாழ் மக்களின் குடி யிருப்பு மற்றும் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிருஷ்ண கிரி மாவட்ட மாவட்ட மாநாடு தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தளி ஒன்றிய செய லாளர் சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது. கெலமங்கலம் ஒன்றி யச் செயலாளர்ராஜா முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு நிறைவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல் நன்றி கூறினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், இருதயராஜ், தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், கோவில் சமய நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் அனுமப்பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
மாவட்டம் முழுவதும் பழுதடைந்து மோசமான நிலையிலும் இடிந்து விழுந்த மலைவாழ் மக்களின் வீடு களுக்கு மாற்று வீடுகள் கட்டித் தர வேண்டும். மலை வாழ் மக்களுக்கு மலைப் பகுதியிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் அட்டை, குடும்ப அட்டை வழங்க வேண்டும். காடுகளில் சிறு வன மகசூல் சேகரிக்க அனுமதி வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு அரசு முன்னுரிமையில் அரசு வேலை வழங்க வேண்டும். மலை மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு அந்தந்த பகுதியிலேயே உண்டு, உறைவிட பள்ளிகள், சாலை, பேருந்து வசதிகள் அமைத்து அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக சிவராஜ், செயலாளராக குமார வடிவேல், பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.