தருமபுரி, மார்ச் 16- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் அரூரில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற் றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.கண்ணகி தலைமை வகித் தார். இதில், வன உரிமைசட்டம் 2006-ஐ தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழங்குடி விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். 37 வகை பழங்குடி பிரிவின மக்களுக்கும், மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில தலைவர் பி.டில்லி பாபு, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்டச் செயலாளர் கே.பழணிச்சாமி, மாவட்டப் பொரு ளாளர் எம்.சுமதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுணன், அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் இ.கே.முரு கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் அரூர் ஆர்.மல்லிகா, பாப்பிரெட்டிபட்டி சி.வஞ்சி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதிய நிர்வாகி தேர்வு
இக்கூட்டத்தில், மலைவாழ் மக் கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளராக கே.என்.மல்லையன் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.அம்பு ரோஸ் நன்றி கூறினார்.