சிஐடியு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, மார்ச் 13- மின் வாரிய தொழிலாளர்கள்,அலுவலர்கள்,பொறி யாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பயன்களை உடனடி யாக வழங்குமாறு தருமபுரி வட்ட மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கோருபவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இஎல் சரண்டர், பயணப் படி, இரட்டிப்பு ஊதியம், கணக்கீட்டாளர் மிகைப்பணி ஊதியம் ஆகியவற்றை உடனே வழங்கவேண்டும். அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மக்களின் வரி பணத்தை வீணடிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தருமபுரி வட்ட மேற் பார்வையாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பி.ஜிவா சிறப்புறையாற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட இணை செயலாளர்கள் ஜி.சக்திவேல், கே.ஜெகநாதன், எம்.காளியப்பன், செந்தில்குமார், மாவட்ட துணைத் தலை வர்கள் ஜி.பி.விஜியன், வி.வெண்ணிலா ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி வாழ்த்தி பேசினார். முடிவில் எஸ்.பி.சிவக்குமார் நன்றி கூறினார்.