tamilnadu

img

பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பதவி உயர்வு வழங்கிடுக

உடுமலை, ஆக. 23- பத்து ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட அங் கன்வாடி ஊழியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் சங்க மாநாடு உடு மலையில் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடை பெற்றது. இதில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் தன லட்சுமி, ஒன்றிய செயலாளர் சித்ரா தேவி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

புதிய நிர்வாகிகள்

இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக டி.சித்ரா, செயலாளராக கே.எல்லம்மாள், பொருளாளராக கே.பேபி, துணை தலைவர்களாக வெண்ணிலா, ராணி, கஸ்தூரி, ரத்தனாள், ரமத், துணை செயலாளர்களாக ராணி,  முத்துலட்சுமி, சிவகாமி, பொன்னு தாய், ராமாத்தா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக கே. சித்ரா ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.

தீர்மானங்கள்
மாநாட்டில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங் கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.3500 மற்றும் பணிக் கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் அருகில் இருந்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற பேரணியுடன் மாநாடு நிறைவடைந்தது.