கோவை, ஆக. 31 – தனியார் வர்த்தக நிறுவனங்கள் தனது பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதற் கான அனைத்து செலவினங்க ளையும் ஏற்றுக் கொள்ள வேண்டு மென்ற கோவை மாநகராட்சி யின் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித் ததன் விளைவாக அப்பரிசோத னையை அரசே மேற்கொள்ளும் என கோவை மாநகர ஆணையா ளர் மற்றும் தனிஅலுவலருமான ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரி வித்துள்ளார். கோவையில் தனியார் நிறு வனங்கள், தனியார் அலுவலகங் கள், கடைகளில் பணிபுரியும் பணி யாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண் டும் என்றும், அதனை தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங் களில் தங்களது சொந்த செலவில் செய்ய வேண்டுமெனவும் கோவை மாநகராட்சி அறிவிப்பு வெளி யிட்டிருந்தது.
இதனை கண் டித்து கடந்த 28 ஆம் தேதி மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி வெளி யிட்ட அறிக்கையில், கடந்த ஆறு மாதகாலமாக கொரோனா நோய்த்தொற்றால், தனியார் நிறுவனங்கள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பணியா ளர்களுக்கு ஊதியம் தர முடியாமல் திணறி வரும் நிலையில், பரி சோதனைக்கான செலவை சம்பந் தப்பட்ட நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்கிற கோவை மாந கராட்சியின் அறிவிப்பு ஏற்கக் கூடி யதல்ல. இந்த உத்தரவுப்படி தனி யார் நிறுவனங்களில் பணியாற்றுப வர்களில் குறைந்தது 5க்கும் மேற்பட் டவர்களுக்கு பரிசோதனை செய்வ தென்றால் ரூ.25 ஆயிரம் வரை செல வாகும். அதுவும் 10 தினங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை மேற்கொள்வது மிகவும் கடினம். எனவே மாநகராட்சிப் பொறுப்பில் கூடுதல் ஆய்வு மையங்களை அமைத்து தனியார் நிறுவன ஊழி யர்கள், கடைப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை அர சின் செலவிலேயே செய்திட வேண் டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த அறிக்கையின் எதிரொலியாக சனியன்று கொரோனா நிவார ணப் பணிகள் குறித்தான ஆலோச னை கூட்டம் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்ட மாநகர ஆணை யாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ர வன்குமார் ஜடாவத் கூறுகை யில், கோவையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள், காய்கனி கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி யில் வியாபாரம் செய்பவர்கள், மளிகைக்கடை வைத்திருப்போர், பூக்கடை வைத்திருப்போர், கட்டிட வேலைக்குச் செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் அப்பகுதியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள் ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை யை ஏற்று மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு பொதுமக்க ளும், வர்த்தக நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.