திருப்பூர், ஜன. 29 - திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்ட பாண்டியன் நகர் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழங்கும் குடி நீரை உடனே வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். 3ஆவது வார்டு விஜயபுரி கார்டன், ஒட்டப்பாளையம், அன்னையம்பாளையம், தியாகி குமரன் காலனி, பிரியங்கா நகர் பகுதிகளில் பழுதடைந்த சாலை களைப் புதுப்பிக்க வேண்டும், மண் சாலைகளைத் தார்ச் சாலைகளாக மாற்ற வேண்டும். வடிகால் வசதி செய்து தர வேண்டும். வீதி விளக்கு கள் இல்லாத பகுதிகளில் புதிய விளக்குகள் அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீரை வழங்கவும், பாண்டியன் நகர் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து இந்த பகுதிக்கு வழங்கி வந்த குடிநீரை கடந்த ஆறு மாதங் களுக்கு முன்பு திடீரென துண்டித்து விட்டு வேறு பகுதிகளுக்கு வழங்கு கின்றனர். இப்பகுதிக்கு உரிய நீரை வழங்க வேண்டும், பழுதடைந்த ஆழ்குழாய்களைச் சீரமைக்க வேண்டும். பிரியங்கா நகரில் புதிய ரேசன் கடை அமைக்க கட்டிடம் கட்டித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று முதலாவது மண்டல அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் சென்றனர். கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், கோபால், கிளைச் செயலாளர்கள் இந்திரா நகர் பாண்டுரங்கன், விஜய புரி கார்டன் பாண்டுரங்கன், ராஜா மணி ஆகியோர் பங்கேற்றனர். பகுதி கோரிக்கைகளை நிறை வேற்றித் தர வேண்டும் என அதி காரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.