பொள்ளாச்சி, ஜூன் 12- சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளைப் பாதுபாப்பான முறையில் நடத்தினால் தான் மட்டுமே அனுமதிக்கப்ப டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி யில்லை என, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சமீ பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொள்ளாச்சி நகர காவல் துறையினர், சாலையோர வியாபாரிகளிடம் அறிவுரை கூறிவந்தனர். இனி பொள்ளாச்சி பகுதிக ளில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் செயல்பட அனுமதி இல்லை என, கூறப்பட்டதாக காவல் துறையினர் எச்சரித் தனர். இதனையடுத்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று சாலையோர வியாபாரிகள் திடீரென அதிக அளவில் குவிந்தனர். இதனையடுத்து சாலையோர வியாபாரிகளிடம் சார் ஆட்சி யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது.
இதில், சாலையோர உணவகங் கள் மற்றும் தள்ளுவண்டிகளில் அதன் உரிமையாளர்கள் முககவசம் கட்டாயம் அனிந்திருக்க வேண்டும். மேலும், பிளாஸ் டிக் பைகள் மற்றும் ஸ்பூன்களை தவிர்க்க வேண்டும். இரண்டு நபர்களுக்கு மேல் கடை களில் கூட்டம் சேரக்கூடாது. காளான், நூடுல்ஸ் போன்ற பாஸ்ட்புட் சிற்றுண்டி களில் பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். வாழை இலைகளை மட்டுமே பயண்படுத்த வேண்டும். புதியதாக தள்ளு வண்டி கடைகள் செயல்பட அனுமதி யில்லை. சமூக இடை வெளியினை பின்பற் றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் தெரிவித்தார்.