அன்று…
பாலக்காடு-கோவை-ஈரோடு பயணிகள் ரயில் சேவையை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 12.5.2013 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இன்று
பாலக்காடு - ஈரோடு இடையே, கோவை வழியாக செல்லும் பயணிகள் ரயில், திங்கள் (01.04.2019) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காட்டில் தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ஈரோடு பாசஞ்சர் ரயில் (66608) கோவை, திருப்பூரை கடந்து இரவு 7 மணிக்கு ஈரோடு சென்றடையும். இடையில் 20க்கும் மேற்பட்ட வழியோர ஸ்டேஷன்களில் பயணிகள் ரயில் நின்று செல்வதால், ஆயிரக்கணக்கானோர் தினமும் அதில், பயணித்து வந்தனர். இரு வழித்தடத்திலும் இந்த ரயில் இயங்காது என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திடீரென ரயில் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பல்வேறு ரயில் நிலையங்களில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாதாரண கட்டண ரயில்களை ரத்து செய்து விட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்பு ரயில்களை இயக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதி என அவர்கள் தெரிவித்தனர்.