அவிநாசி, நவ. 26- அவிநாசி அருகே முத்தரையர் காலனி பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வா யன்று ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அவினாசி ஒன்றியம், வடுகபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட முத் தரையர் காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் சாலையின் இருபுறங்களிலும், புதர்கள் மண்டி, சாக்கடை தேங்கி வருகிறது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்க ளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சுகாதார கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. எனவே, உடனடியாக சாக்க டையை சுத்தம் செய்யக் கோரியும், புதர்களை அகற்றக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற் றும் பொதுமக்கள் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு மனு அளித்தனர். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் எஸ்.வெங்கடாச லம், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கோரிக்கைகள் தொடர் ்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.