குளித்தலை, ஏப்.3-பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஐ.ஜே.கே.நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்ராஜூ, திமுக எம்எல்ஏ ராமர், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் தேவேந்திரன், ஐ.ஜே.கே.மாவட்டச் செயலாளர் பிரகாஷ்கண்ணா, மனித நேய மக்கள் கட்சி அயூப்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங் கேற்று பேசியதாவது:நாடாளுமன்ற தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வாக்காளர்கள் பாடுபட வேண்டும். மோடியை விமர்சித்தால் தேச துரோக வழக்கு போடும் சர்வாதிகார ஆட்சியை பாஜக செய்து வருகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டுமென சட்டசபையில் மசோதாதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தீர்மானத்தை மோடி ஏற்றுக் கொள்ளவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிநபர் கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என போலியான வாக்குறுதிகளைஅள்ளிவீசி ஆட்சிக்கு வந்தது. ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தின் எண்ணிக்கையும் விலைவாசியும் அதிகமாகஉயர்ந்துள்ளன.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி பாஜக. தமிழகத்தில் பாஜக-அதிமுக-பாமக-தேமுதிக கட்சிகள் தற்போது தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட் டணி கொள்கை கூட்டணி, அதிமுக கூட்டணி கொள்ளை கூட்டணி.பொள்ளாச்சியில் சமூக விரோதிகள் சிலர் 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அதைபடம் எடுத்து பணம் பறித்துள்ளனர்.இந்தக் கொடுமை கடந்த 7 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் அதிமுகஅரசு பாரபட்சமாக செயல்படுகிறது.தமிழகத்தில் கஜா புயலால்பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குநிவாரணமாக தமிழக அரசு ரூ.15ஆயிரம் கோடி தரவேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கைவைத்தது. ஆனால் மத்திய மோடிஅரசோ தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கில் வெறும் ரூ.1500 கோடி மட்டுமே அனுப்பியது. அதனால் வரும் தேர்தலில் சர்வாதிகார மோடி அரசை அகற்றிடஉதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார். (ந.நி.)