கோவை, செப். 20 - தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊதிய உயர்வை வழங்கிடக்கோரி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர். கு.இராசமணியை சந்தித்து மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, கொரோனா சிறப்பூதியம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்க ளுக்கு அரசாணை 180ன்படி உத வித்தொகை வழங்கிட வேண்டும். மாந கராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்திட வேண்டும். பேரூராட்சிகளில் அனைத் துப் பனியாளர்களுக்கும் மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கிட வேண்டும். பேரூராட்சி பணி யாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், போன்ற சட்ட சலுகைகள் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இம்மனுவை சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூத்தி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க செயலாளர் கே.இரத்தினகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.