tamilnadu

img

புதிய கால்நடை மருத்துவமனை திறப்பு

சேலம், பிப்.28 - சேலம் மாவட்டம், எஸ்.பாப்பாரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிளை மருத்துவமனையை வீர பாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி வெள்ளி யன்று திறந்து வைத்தார்.  சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியில் கால்நடை கிளை மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி திறந்து வைத்தார். முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர் தயாளன் வரவேற்புரை ஆற்றி னார். ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வீரபாண்டி ஒன்றியக்குழு தலைவர் வருத ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் நடை பெற்ற மருத்துவ முகாமில் 200 மாடுகள் மற்றும் எருமை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதில்  கால்நடை மருத்துவர்கள் ரமேஷ், கண்மணி, விவே கானந்தன், கால்நடை ஆய்வாளர் வசந்தா உள்ளிட்ட கால் நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் எண்ணற்றோர் கலந்து கொண்டனர்.