tamilnadu

img

மேட்டுப்பாளையம் அருகே கொன்று புதைக்கப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் தோண்டியெடுப்பு

மேட்டுப்பாளையம், செப்.16- மேட்டுப்பாளையம் அருகே ஆறு மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட கூலி  தொழிலாளியின் உடல் தோண்டி யெடுக்கப்பட்டது. கோவை அருகே உள்ள க.க சாவடி குட்டி கவுண்டன்புதூர் பகு தியை சேர்ந்தவர் மாரிமுத்து (40). கூலி தொழிலாளியான இவர் தனது தாயாரான கருப்பாளுடன் (70) வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் மாயமானது குறித்து க.க சாவடி காவல் நிலை யத்தில் கருப்பாள் புகார் அளித் துள்ளார். இதனையடுத்து தனிப் படை அமைத்து காவல்துறை யினர் மாரிமுத்துவை தேடி வந்த னர். இந்நிலையில், கோவை சாய் பாபா காலனி பகுதியை சேர்ந்த  சுந்தர்ராஜ் மற்றும் பழனிவேல் ஆகியோரை பிடித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது கூட்டாளி களுடன் இணைந்து மாரி முத்துவை கடந்த ஆறுமாதங்க ளுக்கு முன்பு பணத்திற்காக கடத்தி அடித்து கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடலை மேட்டுப்பாளை யம் அன்னூர் சாலையில் உள்ள தேவராயபுரம் என்னும் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் புதைத்தாகவும் தெரிவித்துள்ள னர். இதனையடுத்து மாரிமுத்து வின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சுந்தரராஜை காவல் துறையினர் அழைத்து வந்து அடையாளம் காட்ட செய்தனர். இதன்பின் கோவை அரசு மருத் துவமனை மருத்துவ பேராசிரியர் ஜெயசிங் மற்றும் அன்னூர் தாலூகா வட்டாட்சியர் சந்திரா முன்னிலையில் புதைக்கப்பட்ட மாரிமுத்துவின் உடல் தோண்டி  எடுக்கப்பட்டது. வெறும் எலும்பு கள் மட்டுமே கிடைத்த நிலையில் அவை மருத்துவ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  முன்னதாக, கடந்த மாதம் கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டா டிய கும்பலை சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய் தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்தான் இக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆறு  மாதங்களுக்கு முன்பு மாரிமுத் துவை கொன்று புதைத்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்ப வம் கோவையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.