திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்.3 ஆம் தேதி கோவை வருவதையொட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனித நேய ஐனநாயக கட்சி, ஆதித்தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சனியன்று சிபிஎம் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொடிசியா அருகே திமுக தலைவர் பங்கேற்று உரையாற்றுகிற பொதுக்கூட்டத்திற்கு கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோரை திரட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.