கோவை, ஜூலை 16 - கோவை மாநகராட்சிக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறு வனம் சார்பில் ரோபோடிக் 2.0 என்ற கழிவுகளை அகற்றும் இயந்திரம் வழங் கப்பட்டது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு 5 ரோபோடிக் 2.0 இயந்திரங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னி லையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந் தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், கோவை மாநகராட்சி யில் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 என்ற இயந்திரம் வழங்கப்பட் டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர் அகற் றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் இந்த ரோபோடிக் 2.0 இயந்திரம் வழங் கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கோவையில் கொரொனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் வெளி யூரில் இருந்து அனுமதி யின்றி வந்திருப் பவர்கள் உடனடி யாக அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்க வேண் டும். கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுக்கு சித்த மருத்துவ முறை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின் றது. இதுவரை 80 ஆயிரத்து 623 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1ஆயிரத்து591 பேருக்கு தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க லாம். இவ்வாறு அவர் தெரிவித் தார்.
ஊடகவியலாளர்கள் அதி ருப்தி
கழிவுநீரை சுத்தம் செய்யும் நவீன ரோபோ அளிக்கும் நிகழ்வை செய்தியாக்க ஊடகவியலா ளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைய டுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு சிற் றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, மாநக ராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத் தும் கழிவறை முன்பு மேஜைகள் போடப்பட்டு விநி யோகித்தனர். நோய் தொற்று இடமாக கழிவறை உள்ளது என சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிற நிலையில், அங்கேயே ஊடகவியலாளர்களுக்கு சிற் றுண்டி வழங்கப்பட்டது ஊடகத்தினரை பெரும் அதி ருப்திக்குள்ளாகியது.