tamilnadu

img

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

அவிநாசி, ஆக.28- அவிநாசி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் திங்களன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின், அவி நாசி வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற மாற்று திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமினை வட்டார உதவி கல்வி அலுவலர் ஜஸ்டின்ராஜ், துவக்கி வைத்தார். மருத்துவர்கள் தேவசேனாதிபதி, பாலாஜி, பத்மநாபன், ஜெயந்தி, கார்த்திகேயன், கண் பார்வை கண்டறியும் நிபுணர் சதீஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறன் குழந் தைகளுக்கு பரிசோதனைகள் நடத்தினர்.  மருத்துவர்களின் சான்றளிப்புக்கு ஏற்ப, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் தேசிய அடையாள அட்டை வழங்கினார். தகுதியுள்ள வர்களுக்கு  உதவி உபகரணம் மற்றும் உதவித்  தொகை போன்ற பல அரசு சலுகைகளுக்குப் பரிந் துரை செய்தார்.  முகாமில் 14 வயது வரையுள்ள 167 பேர், 15 – 18 வயது வரை 54 பேர் என 221 பேர் பங்கேற்றனர்.