திருப்பூர், செப்.13- திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.புதூர் நடுநிலைப் பள்ளியை இடம் மாற்றும் முடிவைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் கே.பொம்முதுரை தலைமை வகித்தார். இதில் அரசுப் பள்ளியை பாது காக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் ஆடம்பர நடவடிக்கை எடுப்பதற்காக அடிப்படை கல்வி உரிமையைப் பறிக் கும் செயலைக் கைவிட வேண்டும், பாரம் பரியம் மிக்க முத்துப்புதூர் பள்ளியை அதே இடத்தில் செயல்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட வரைபடத்தை மாற்றி அமைத்து பணி செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் உரையாற்றினர். திரளானோர் இதில் பங்கேற்றனர்.