பணம் திருடியதாக மாணவனுக்கு மிரட்டல் தனியார் பள்ளி மீது நடவடிக்கை கோரி பெற்றோர் புகார்
சேலம், அக்.15- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கல்பரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. விசைத்தறி தொழி லாளர் இவரின் மகன் ஆல்வின் ஸ்டீபன் (9). இவர் சித்தர் கோவில் அருகே புதுரோடு பகுதியில் உள்ள ஷாலோம் கான்வெண்ட் மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் நான் காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதியன்று பள்ளிக்கு வேனில் சென்ற பொழுது பணத்தை திருடியதாக கூறி ஆசிரியர்களும், வாகன ஓட்டுநர்களும் மாணவனை 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனத்தில் வைத்து மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டள்ளது. இதையடுத்து அவரின் பெற் றோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் மாண வனுக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் கூறுகையில், உங்கள் குழந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளான். எனவே அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மாண வரின் பெற்றோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந் தித்து, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது பள்ளி கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக் கக்கோரி மனு அளித்தனர்.
ஈரோட்டில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி
ஈரோடு, அக். 15- ஈரோட்டில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட் டுப் போட்டிகள் அக்.22 ஆம் தேதியன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவு 2019 - 2020 ஆம் ஆண்டு மாவட்ட அளவி லான கேரம் விளையாட்டுப் போட்டிகள் அக்.22 ஆம் தேதி யன்று காலை 8 மணிக்கு ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட் டரங்கில் நடைபெறுகிறது. இதில் இளநிலைப் பிரிவு (மழலை முதல் 5 ஆம் வகுப்பு வரை) மாவட்ட அளவில் ஒற்றை யர் போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1000, இரண்டாம் இடத்திற்கு ரூ.500, மூன்றாம் இடத்திற்கு ரூ.250 எனவும், இரட்டையர் போட்டியில் முதலிடத்திற்கு ரூ.2 ஆயிரம், இரண்டாமிடம் ரூ.1000, மூன்றாமிடம் ரூ.500 என பரி சளிக்கப்படுகிறது. முதுநிலைப் பிரிவில் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாவட்ட அளவில் ஒற்றையர் போட்டி யில் முதலிடம் ரூ.2 ஆயிரம், இரண்டாமிடம் ரூ.1000, மூன் றாமிடம் ரூ. 250 எனவும், இரட்டையர் போட்டியில் முதலி டம் ரூ.4 ஆயிரம், இரண்டாமிடம் ரூ.2 ஆயிரம், மூன்றாமி டம் ரூ.1000 என பரிசளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஆன் லைன் மூலம் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்திற்குள் சென்று, Schemes ( திட்டங்கள்) நுழைந்து அதில் கண்டுள்ள ஈரோடு மாவட்டத்திற்கு என்று குறிப்பி டப்பட்டுள்ளதில், கேரம் விளையாட்டிற்கான விண்ணப் பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே மேற்கண்ட மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலரையும் மற்றும் தொலைபேசி எண். 0424-222315, கைபேசி எண் 7401703490 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.