நாமக்கல்லுக்கு புதிய எஸ்.பி நியமனம்
நாமக்கல், டிச. 31- நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, சாய்சரண் தேஜஸ்ஸ்ரீ கடந்த மாதம் ஹைதராபாத் போலீஸ் அகாடமிக்கு மாறுதலில் சென்னார். இதனை அடுத்து ஏடிஎஸ்பி மணிமாறன் எஸ்.பி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் எஸ்பி-யாக பணியாற்றிய கலைச் செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்பியாக தமிழக அரசால் வியா ழனன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் மருத்துவர் தற்கொலை
ஈரோடு, டிச. 31- உயர்கல்விக்காக மனைவி வெளியூரில் தங்கியிருந்த நிலையில் ஈரோட்டில் இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள மேவானி யைச் சேர்ந்தவர் சண்முகம். மனைவி ஜெயலட்சுமி. இவ ரது இரண்டாவது மகன் சக்திவேல் (39) ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள நலன் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஈரோடு புதிய ஆசிரியா் காலனியில் தங்கி சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராகப் பணி யாற்றி வந்தார். வழக்கம் போல் வியாழனன்று வேலைக்குச் சென்ற சக்திவேல் வெள்ளியன்று மருத்துவமனைக்குச் செல்ல வில்லை. இதனால் பணிபுரிந்த மருத்துவமனையிலிருந்து கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முயற்சித்தனா். கைப்பேசி அழைப்பு ஏற்கப்படாததால் மருத்துவமனை ஊழியா்கள் அவரது வீட்டுக்குச் சென்றனா். அங்கு மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு அருகில் உள்ள சுதா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோ தித்த மருத்துவா்கள் சக்திவேல் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இவரது பூர்ணிமா என்ற மனைவியும், இனியன் (10) என்ற மகனும் உள்ளனா். எம்பிபிஎஸ் பட்டம் பெற்றுள்ள பூா்ணிமா மேற்படிப்புக்காக அகமதாபாத்தில் தங்கி, பயின்று வருகிறார். அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக மதுரையில் உள்ள பூர்ணிமாவின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். சக்திவேலின் பெற்றோர் சொந்த ஊரான மேவானிக்குச் சென்றிருந்தனா். தனியாக இருந்த சக்திவேல் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேலின் தந்தை காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
தீ விபத்தில் ஒருவர் மரணம்
ஈரோடு, டிச. 31- அந்தியூர் அருகே விநாயகர் கோவிலுக்கு சென்றவர் தீ வீபத்தில் மரணமடைந்தார். அந்தியூர் அருகே பெருமபாளையத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன். இவர் ஈரோட்டில் சொந்தமாக பைப் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் சோமு, சரோஜா(57). இவர்கள் சொந்த விவசாயம் செய்து வந்தனர். இந்நிலை யில் சரோஜா கடந்த 16ஆம் தேதி பெருமாபாளையம் விநாய கர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அப்போது அங்கு வைத்திருந்த விளக்கில் அவரது சேலை பட்டு தீப்பற்றியுள்ளது. இதில் இடுப்பின் இருபுறம், வலதுகை ஆகிய இடங்களில் தீ காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனஞ்செயன் தாயை மீட்டு ஈரோடு கவின் கேர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். மேல் சிகிச்சைக்காக 25ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனைக்கு அனும திக்கப்பட்டார். அங்கு வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து அந்தியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
15 ஆண்டுகளாக வேலை செய்து வந்த பணியாளர்கள் நீக்கம்: ஆட்சியரிடம் புகார்
ஈரோடு, டிச.31- ஈரோடு மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக டெங்கு மஸ் தூர் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்திற்குட்பட்டது நஞ்சை கொளாநல்லி ஊராட்சி. இங்கு கொசு ஒழிப்பு பணி யில் மஸ்தூர் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். மக்கள் தொகைக்கேற்ப பணியாளர்கள் நியமிக்கப்படாமல், குறைந்த பணியாளர்களே பணியிலிருந்தனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொசுவலை போர்த்திக் கொண்டு வந்து ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். அப்போது பிற ஒன்றியங்களில் ரூ.318 கூலி வழங்கும் போது கொடுமுடி ஒன்றியத்தில் ரூ. 218 மட்டுமே வழங்கப்படுகிறது. பிரதி மாதம் முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சீருடை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஊதியமும் வழங்கப்பட்டது. அதேசமயம் மனு கொடுத்த வர்களில் தொகுப்பூதிய அப்படையில் பணியாற்றி வரும் கலாவதி,சசி உள்ளிட்டோரை டிசம்பர் 1 முதல் பணிக்கு வர வேண்டாம் என பணி மறுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. எனவே, தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேலை வழங்குமாறும், வேலை நீக்கம் செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சிய ருக்கு மனு கொடுத்துள்ளார்.
தியாகி எஸ்.விஸ்வநாததாஸ் நினைவு தினம்
உடுமலை, டிச.31- உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ்.விஸ்வ நாததாஸ் 82 ஆவது நினைவு தினம் சனியன்று அனுச ரிக்கப்பட்டது. உடுமலை கபூர் கான் வீதியில், தமிழ்நாடு சவரத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி எஸ். விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதில், சங்கத்தின் உடுமலை கிளையின் அவைத் தலைவர் சுப்பிரமணியம், நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர். இதில், செயலாளர் ரத்தின குமார், பொருளாளர் சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொத்தமல்லி பயிரிட விவசாயிகள் ஆர்வம்
திருப்பூர், டிச.31- உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் கொத்த மல்லி தழை பயிரிடுவதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய பகுதி யில் விவசாயிகள் தற்போது கொத்தமல்லி தழை பயிரிடுவ தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதுள்ள வெயில் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் இருப்பதால், தண்ணீர் சிக்கனம் செய்து அதற்கு தகுந்தாற் போல் அதிக விளைச்சல் கொடுக்கும் பயிர்களை தேர்ந்தெ டுத்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது விவசா யிகள் கொத்தமல்லி தழையை தேர்வு செய்து, முறையாக பயி ரிட்டு வருகின்றனர். மருத்துவ குணம் கொண்ட கொத்த மல்லி தழை உடம்பில் உள்ள நோய்களை சரி செய்யவும், வயிற்றுப்புண், அஜீரண கோளாறு உள்ளிட்ட பல்வேறு மருத் துவ குணங்கள் உடையவை. விவசாயிகள் கொத்தமல்லி தழையை பயிரிட்டு தினசரி சந்தை மற்றும் சிறிய பெரிய வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு கொத்தமல்லி தலா ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த செலவில் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.