இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை சிவானந்தபுரம் கிளையின் சார்பில் விடுதலை போராட்ட மாவீரன் பகத்சிங்கின் பிறந்தநாள் விழா உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பாலசந்திர போஸ், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.