சேலம், மார்ச் 4- பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை மற்றும் ராயல் சொசைட்டி ஆப் வேதியியல் சார்பில் SMART-2020 என்ற வேதி யியலின் பற்றிய முதலாவது பன் னாட்டு கருத்தரங்கு பல்கலைக் கழக வளாகத்தில் புதனன்று நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பி.குழந்தைவேல் தலைமை வகித்து, தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசிய தாவது, மனித வாழ்வியல் நடை முறையில் ஸ்மார்ட் மெட்டிரியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் வேதியியலில் ஏற்பட்டுள்ள அளவிற்கறிய வளர்ச்சி மட்டுமின்றி பலவேறு துறைகளிலும் ஸ்மார்ட் மெட்டிரியல் மிகவும் பயன்படு கிறது. மேலும் கல்வியாளர்கள், தொழில்துறையினர், ஆராய்ச்சி யாளர்கள் மற்றும் பயிற்சியாளர் களுக்கு இந்த துறையின் சிறப்பு மற்றும் கலந்துரையாடல் வளர்ச்சி யை சந்திப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.
மேலும் இக்கருத்தரங்கில் அறிஞர்கள், பிரதிநிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் அனு பவத்தையும், அறிவையும் தொடர்பு கொள்வதற்கும் ஆராய்ச்சி செய்வற் கான வாய்பாக அமைந்ததுள்ளது என அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரூமேனியா நாட்டைச் சோந்த பேராசிரியர் முனைவர் சோல்டன் மற்றும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டெபோரா அலியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார். மேலும், இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் பேரா சிரியர் முனைவர் எஸ்.நடராஜன், கொரியாவிலிருந்து வருகை புரிந்த பேராசிரியர் முனைவர் டி.எஸ்.என். சங்கர நாரயணன், தென் இந்தியா ராயல் சொசைட்டி ஆப் வேதியியல் செயலாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அறிஞர் பேராசிரியர் முனைவர் பி.மனோரவி மற்றும் பேராசிரியர் முனைவர் ஜான் பீனிப், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் டி.ரவி சங்கரன், மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் டி.வாசுதேவன் மற்றும் சென்னை போன்ற முன்னணி நிறுவனங்களைச் சார்ந்த அறிவியல் வல்லுனர்கள் கருத்தரங்கில் உரையாற்றினர். மேலும், 1770 ஆராய்ச்சி கருத்துரு அடங்கிய பன்னாட்டு கருத்தரங்கு நினைவு மலர் மற்றும் பேச்சாளர்கள், பங்கேற் பாளர்கள் ஆய்வு சுருக்கம் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டன. இக்கருத்தரங்கில் முதன்மை நிறுவனங்களான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் (CSIR ) மற்றும் பல்கலைக் கழக மானியக்குழு ஆகியவை நிதி யுதவி அளித்துள்ளன.