tamilnadu

சார்பதிவாளர் அலுவலகத்தில் தனி மனித இடைவெளி கட்டங்கள்

பொள்ளாச்சி, ஜூன் 13- பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சார் பதிவா ளர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலி ருந்து, பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தனி மனித இடைவெளிக்கான கட்டங்கள் வரையப் பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில்,  பொதுமக்கள் கூடு கின்ற மிக முக்கிய இடங்களில் ஒன்றான, சார் பதி வாளர் அரசு அலுவலகங்களில் சமூக விலகளுக்கான வரைபட்ட கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. தற் போது கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சார் பதிவாளர் அலுவலகங்களில் உள்ளே வருகின்ற மக்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத் தப்பட்டு வருகின்றனர்.

மேலும், பத்திரங்கள் பதிவுக ளுக்கான டோக்கன்கள் அழைப்பு வரும்போது, கிருமி நாசினி கொண்டு கைகளை  கழுவிய பின்னரே முகக்கவசங்களுடன் உள்ளே அனுமதிக்கப்படுவார் கள். பொதுமக்கள் வரையப்பட்டுள்ள தனி மனித இடைவெளி கட்டங்களில் வரிசையில் வர வேண்டு மென,  நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.