திருப்பூர், ஆக. 16 – திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 73ஆவது சுதந்திர தின கொடி யேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மைதா னத்தில் வியாழனன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கயல்விழி உள்பட வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறையினர் பங்கேற்றனர். காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தல் பணியை சிறப் பாக நிறைவேற்றிய தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸுக்கு சான்றிதழ் அளிக்கப் பட்டது. அத்துடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளா கத்தில் தேசியக் கொடியை மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் ஏற்றி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.குண சேகரன், கே.என்.விஜயகுமார், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் குமார் நகர் மின்வாரிய வளா கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மின் ஊழியர், அதிகாரிகள் பங்கேற்றனர். அமர்ஜோதி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சங்க நிர்வாகிகள், உறுப் பினர்கள் பங்கேற்றனர். அதேபோல் ஏவிபி லே அவுட் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முன்னாள் கவுன்சிலர் பி.ஆர்.நட ராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இப்பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் சுதந்திர தினக் கொடியேற்று விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கேயம் படியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பா.பானுஸ்ரீ கார்த்திகா தலைமை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.சண்முகம், ஆசிரியர் தெய்வசிகாமணி ஆகியோர் உரையாற்றினர்.