தென்காசி, ஆக.16- தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 சனியன்று நடைபெற்றது. விழா விற்கு ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கொரோனா தடுப்பு பணியில் சிறப் பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு ஆட்சியர் நற்சான்றி தழ் வழங்கி பாராட்டினார். நெல்லை மாவட் டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட் டம் உருவானது. இதையடுத்து மாவட்டத் தின் முதல் சுதந்திர தின விழா நடை பெற்றது.
சிபிஎம்
சிபிஎம் சார்பில் திருநெல்வேலி பாப்பாக் குடி ஒன்றியம் முக்கூடல் பெரியார் திட லில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் மாரிசெல்வம் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நான்குனேரி ஒன்றியம் இராமனேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி மேலாண் மைக்குழு தலைவி இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் செ.பால்ராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார். விழாவில் பள்ளி சுகாதாரப் பணி யாளர் தங்கம்மாள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.