tamilnadu

லயன் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

மன்னார்குடி, ஆக.17- மன்னார்குடி லயன் சங்கத்தால் மன்னார்குடி சிஏகே மருத்துவமனையிலும், கோபாலசமுத்திரம் பள்ளியிலும், அரிமா சங்கக் கட்டிடத்திலும் தலைவர் சௌரிராஜன் தேசிய க்கொடி ஏற்றி வைத்தார். மருத்துவர்கள் அசோக்குமார், தர்மரா ஜன், நிகழாண்டின் செயலர் உஷா, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சுதந்திர தினத்தன்று பிறந்த 70 வயது நிறை வடைந்த மூதாட்டிக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள சேலை பரி சளிக்கப்பட்டது. மேலும் முன்களப் பணியாளர்களான மருத்து வர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.