வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்
சேலம், செப்.17- சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிழக்கு மாநகரக் குழு சார்பில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாநகரம் 58ஆவது டிவிஷன் செல்லகுட்டி காடு, ஜவகர் நகர் பகுதியில் சாலைகள் கடந்த ஓராண்டாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனை செப்பனிட வாலிபர் சங்கம் சார்பில் மாநகராட்சி அதி காரிகளை பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் கிழக்கு மாநகர குழு சார்பில் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்தில் சங்கத்தின் கிழக்கு மாநகர தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, வாலிபர் சங்க செயலாளர் பெரியசாமி, துணை செய லாளர் தமிழ்ச்செல்வன், நந்தகுமார், விமல் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதி காரி செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள், வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலை செப்பனிடப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட் டம் கைவிடப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி யது.