ஆம்பூர்,டிச.11- வாணியம்பாடி அருகே மலை கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்தவ ரின் சடலத்தையும், நடக்க முடி யாத அவரது கர்ப்பிணி மனைவி யையும் நள்ளிரவில் தீப்பந்தங் கள் ஏந்தியவாறு, சுமார் 7 கிலோ மீட்டர் தூரம், டோலிகட்டி நடந்தே தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிரா மம் உள்ளது. இங்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை வசதி இல்லாமல் தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவை சிங்கா நல்லூரில் வேலை பார்த்துவந்த இந்த கிராமத்தைச்சேர்ந்த முனு சாமி என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது சடலத்தை சொந்த ஊர் கொண்டு வந்த நிலையில், சாலை வசதி இல்லா ததால் ஆம்புலன்ஸ் வாகனம் மலைஅடிவாரத்தில் நிறுத்தப் பட்டது. நள்ளிரவு நேரம் என்ப தால் விளக்கு வசதி இல்லாத போதிலும் சடலம் அடிவாரத்தி லேயே இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் சைக்கிள் டியூப்களை தீப்பந்தம் போல் எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் முனுசாமியின் சட லத்தை போர்வையால் டோலி கட்டி கரடு முரடான பாதை வழி யாக உறவினர்கள் தூக்கிச் சென்ற னர். அதேபோல் முனுசாமியின் 7 மாத கர்ப்பிணி மனைவி வனிதா வையும் டோலிகட்டி தூக்கிச் சென்றனர். சாலை வசதி கேட்டு முறையிட்டும், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், இந்த அவலம் அரங்கேறியுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரி வித்தனர்.