நாகப்பட்டினம், நவ.11- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டத்தில் பூவன் தோப்பில் சாலை வசதி செய்து தர வேண்டி, அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வேதாரணியம்- அகஸ்தியன் பள்ளி முதல் திருத்துறைப்பூண்டி வரை அகல ரயில் பாதை மந்த கதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழிப்பாதையில் அமைந்துள்ள பூவன்தோப்பு என்னும் கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அகல ரயில் பாதைப் பணியினால் இந்த கிராமத்தின் சாலையின் இரு பகுதிகளிலும் பாலங்கள் அமைத்திட வும், மற்ற பணிகளுக்கும் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுக் குழி களும் மேடுகளாகவும் சேறாகவும் மாறிப் போய், சாலைகளே இல்லாமற் போய் விட்டன. இதனால், பள்ளிக்குப் பிள்ளைகள் செல்லச் சாலை இல்லை. இறந்தவ ரின் உடலை எடுத்துச் செல்ல, சுடு காட்டுக்குப் பாதை இல்லை, கர்ப்பிணிப் பெண்கள், நோய்வாய்ப் படுபவர்க ளை அவசரமாகக் கொண்டு செல்ல, அவசரகால ஊர்திகள் வந்து செல்ல வும் சாலை வசதி இல்லாமற் போயிற்று. எனவே, உடனடியாகத் தங்கள் பகு திக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.