சேலம், மே 27-குடிநீர், சுகாதார வசதிகளை சீர்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பனமரத்துப்பட்டி ஒன்றிய பேரவை ஞாயிறன்று கோகிலாதலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராகருக்மணி, செயலாளராக தனசுதா, பொருளாளராக கோகிலா உள்ளிட்ட 11 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர். இப்பேரவையில் மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளர் என். ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேட்டூர்
இதேபோல், மாதர் சங்கத்தின் மேட்டூர் வட்ட பேரவைக் கூட்டம் மேட்டூர் சின்னபார்க் அருகில் கட்டிட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் ராஜேஸ்வரி கொடியேற்றினார். இதில் புதிய தலைவராக கே.சகுந்தலா, செயலாளராக எஸ்.எம்.தேவி, பொருளாளராக வி.பிரியா உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி, சிறப்புரையாற்றினர்.
தீர்மனங்கள்
இப்பேரவையில், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ரேசன் கடைகளில் மக்களின் கடும் சிரமத்தைக் குறைத்திட நிழற் கூரைகள் அமைக்க வேண்டும். பொன்நகர், பெரியார் நகர்,கூலிலைன் பகுதிகளில் உள்ள வாய்க்கால் பாலங்களை சீர்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.