காஞ்சிபுரம், ஜூன் 4 - பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதிப் படுத்தவேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க காஞ்சிபுரம் மண்டல ஆண்டு பேரவை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகரில் வி.ரவிச்சந்திரன், ஜி.வி.ரவிராஜ் நினை வரங்கில் சம்மேளனத் தலைவர் பா.சுந்தரராசன் தலைமையில் நடை பெற்ற பேரவை கூட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர்கள் வி.சிவலிங்கம் எஸ்.மாயக்கண்ணன், வி.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தோழர் வி.ராஜேந்திரன் நுழைவாயிலில் சங்கத்தின் உதவித் தலைவர்கள் டி.தமிழ்ச்செல்வன் சங்க கொடி ஏற்றிவைக்க என்.நந்தகோபால் வரவேற்றார். இணைச் செயலாளர் ஏ.வெங்கடேசன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் உதவித் தலைவர் ஏ.பி.அன்பழகன் பேசினார். பொதுச் செயலாளர் பி.சினிவாசன் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஜி.கமலக்கண்ணன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், சங்கத்தின் உதவித் தலைவர் பி.ரமேஷ், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங்தாஸ், காஞ்சிபுரம் மண்டல ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செய லாளர் பி.இமயவரம்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன உதவித் தலைவர் எம்.சந்திரன் பேசினார். ஓய்வு பெற்றோர் பிரச்சனை களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருங்கால வைப்பு நிதி கடன்கள் முறையாக வழங்க வேண்டும். போக்குவரத்து கழக பணிமனைகளில் நவீன உபகரணங்களை வாங்கித்தர வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இந்த பேரவைக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக என். நந்த கோபால், பொதுச் செயலாளராக பி.சீனிவாசன், பொருளாளராக ஜி.கமலக்கண்ணன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக உதவித் தலைவர் டி.ரவி நன்றி கூறினார்.