கோபி, ஏப். 30-கோபிசெட்டிபாளையம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மக்காசோளப் பயிர்களை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வுபயிற்சிஅளிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அதிகளவு மக்காசோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் மக்காசோளப்பயிர்களை படைப்புழு தாக்கி பயிர்களை அழித்து வருகிறது. படைப்புழுவை கட்டுப்படுத்த போதிய மருந்துகள் இல்லாததினால் படைப்புழு கட்டுப்பாட்டிற்குள் வராமல் உள்ளது. இதனால் மக்காசோளப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் மக்காசோளத்தில் படைப்புழுதாக்குதல் கட்டுப்பாடு மற்றும் மண்வள அட்டை பரிந்துரைப்படி உரப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் கோபிசெட்டிபாளையம் பகுதியில்பணியாற்றும் வேளாண்மை களப்பணியாளர்கள், இடுபொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இப்பயிற்சிமுகாமில் படைப்புழுகட்டுப்பாடுகள் குறித்துவேளாண் அறிவியல் விஞ்ஞானிஅழகேசன் சிறப்புரைநிகழ்த்தினார். இப்புழுக்களை வைரஸ் மூலமாக மட்டுமே அழிக்க முடியும்என்பதால் தற்போது அப்பணி ஆய்வில் உள்ளதாகக் கூறப்பட்டது. அதுவரை இப்புழுக்களைக் கட்டுப்படுத்த எந்த மருந்துகள் தெளிக்கலாம் பயிர்களை காக்க விவசாயிகளுக்கு எவ்வாறு பரிந்துரைப்பது என்பது உட்பட பல்வேறு விதங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.