tamilnadu

img

17 பேர் பலிக்கு அரசு நிர்வாகங்களும் பொறுப்பேற்க வேண்டும் இரா.முத்தரசன், ஜவாஹிருல்லா பேட்டி

கோவை, டிச. 4-  மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியானதுக்கு அரசு நிர்வாகங்களும் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட்     கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மனித நேய மக் கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் தெரிவித் துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் சரிந்து குடியிருப்பு வீடு கள் மீது விழுந்ததில் 17 பேர் உயிருடன் புதைந்து பலியாகினர். சம் மந்தப்பட்ட இடத்தை புதனன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், வீட்டை விட உயர மாக சுவர் எழுப்பியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2018 அக்டோபர் மாதம் 13 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கையெழுத்து பெற்று மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற் போது சுவர் குறித்து புகார் எதுவும் வந்ததாக தெரியவில்லை என தமி ழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகத்தி டம் கொடுத்த மனு மீது தமிழக அரசு  என்ன நடவடிக்கை எடுத்தது. உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது.  ஆகவே, இதற்கு காரணமான நகராட்சி ஆணையர், வட்டாச்சியர் உட்பட காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண் டும். பாதிப்பிற்கு காரணம் சிவசுப்பிர மணியம் மட்டுமல்ல, அரசு நிர்வாக மும் காரணம். போராட்டம் நடத்தி யவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்தது மோசமான செயல். காவல் துறையும், வருவாய் துறையும் இறந்த வர்களின் உடல்களை உறவினர் களிடம் கொடுக்காமல் எரியூட்டுவது என்பது ஏற்புடைவதல்ல. இது போன்ற செயல்கள் சர்வாதிகார ஆட்சியில்தான் நடக்கும் என்றார். மேலும் நடூர் பகுதியில் ஆதிதிராவி டர் காலனியின் அருகில் இருக்கும் ஓடையை மறித்தும் சுவர்கள் கட்டப் பட்டுள்ளது. ஓடையை மறித்து எழுப் பபட்டுள்ள சுவர் உடனடியாக அகற் றப்பட வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்தார்.
ஜவாஹிருல்லா
இதேபோல், மனித நேய மக்கள்  கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா சுற்றுச்சுவர் இடிந்த இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “உயிருக்கு ஆபத்தான சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்திய காரணத்தினா லேயே பதினேழு அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு  நியாயம் கேட்டும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் கோரி யும் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இயக்கத்தினரை போலீசார் சட்ட விரோதமாக கடுமையாக தாக்கி சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய மனப்பான்மை யோடு சுவர் எழுப்பி அதனை அகற்ற மறுத்த அதன் உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண் டும்” என்றார்.
இயக்குனர் பா.ரஞ்சித்
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சுவர் சரிந்த பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காலை எழுந்தவுடன் தலித்துகள் முகத்தில் விழிக்கக்கூடாது என்ற  நோக்கத்தில் இந்த சுவர் கட்டப்பட் டுள்ளதாக தெரிகிறது. இங்குள்ள தலித் மக்களின் சுவர் குறித்த கோரிக்கை அரசு அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படவில்லை. இங்கு  நடைபெற்ற உயிரிழப்புகள் ஒரு படு கொலையாகவே காணப்படுகிறது. ஆனால் அரசு இதனை இயற்கை பேரிடரில் இறந்தவர்களை கையாள் வதை போல நிவராண நிதி கொடுத்து பிரச்சனையை மூடி மறைக்க முயல் கிறது. ஒரே இரவில் இறந்தவர்கள் உடல்களை எரித்தது மிகப்பெரிய வலி. மரணத்திற்கு காரணமான வீட்டு உரிமையாளர் மீது ஏன் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.