கோவை, ஜூன் 10 - பொது போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்குரிய கட்ட ணங்களை கட்டுவதற்கு பிச்சையெ டுக்க அனுமதிக்ககோரி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திதினர் கோவையில் ஆட்சி யரிடம் மனு அளித்தததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இச்சங்கத்தின் பொது செயலாளர் ஏ.எம்.ரபீக்கூறுகை யில்,வாகன ஓட்டுநர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங் கக் கோரிபலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரையில் அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம், வாகன கட்டண ரத்து உள்ளிட்ட நிவாரணங்களை அறிவிக்க வேண்டும். அனைத்து வாகன கடன்க ளுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2021 ஆம்ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. வாகனத்திற்கான தரச் சான்றி தழை பெறுவதற்கு, வாகனங்களில் பொ ருத்தியுள்ள வேகக்கட்டுப்பாட்டு கரு விகள் மூலம்தரச்சான்றிதழை வழங்க வேண்டும். நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறை யின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். கொ ரோனா வைரஸ் காலத்தில் நிவாரண மாக மாதம் ரூ.7,500ஐ அனைத்து ஓட்டு நர்களுக்கும் மார்ச் முதல் மே மாதம் வரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது என மோட்டர் வாகன சட்ட விதி இருக்கி றது. இந்நிலையில் ஊரடங்கு முடி யும்வரை வாகனங்களுக்கான பர்மிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்ற வற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை களுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர் களுக்கு ரூ.10 லட்சமும், எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்ச மும் உடனடியாக அரசுவழங்கேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதனைத்தொடர்ந்து அனைத்து வாகன கட்டணங்களையும் கட்டு வதற்கு, பிச்சையெடுக்க அனுமதிக்க வேண்டி ஆட்சியரிம் மனு அளித்தனர். இதனையடுத்து மாநகர காவல் ஆணையர், வட்டார போக்குவ ரத்து ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர். முன்னதாக இந்த போராட்டத் தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலை வர் வேணுகோபால், பொருளாளர் ராஜ சேகர், மற்றும் அப்துல்கலாம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வர்களிடம் இருந்து காவல்துறையினர் தட்டுக்களை பறிமுதல் செய்தனர்.