சிதம்பரம், ஜன.17- சிதம்பரம் ராஜா முத் தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ 25 ஆயிரம் வழ ங்க வலியுறுத்தி 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள். இந்நி லையில் மருத்துவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் திங்களன்று காலை 11 மணிக்குள் விடு தியை காலி செய்ய வேண் டும் என்ற அறிவிப்பை ஒட்டி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, துணைவேந்தர் கதிரே சன், பதிவாளர் சீதாராமன், மருத்துவக் கல்லூரி முதல் வர் ரமேஷ், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உள்ளி ட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன் பாடு ஏற்படாத நிலையில் மாணவர்கள் விடுதிக்குச் சென்று தட்டு ஏந்தி உணவு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் களின் ஒரே கோரிக்கை ரூ 25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தமிழக முதல்வர் பயிற்சி மருத்துவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது வரை போராட்டத்தை கை விடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.