கோவை, ஜூலை 5- கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக ஏற்படுத்தப்பட்ட முழு ஊரடங் கால் சாலைகளில் ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட் டது. கோவையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாது காப்பு மற்றும் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற் றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளன. இதன்படி அதி காலை 12 மணி முதல் தமிழகம் முழுவ தும் முழு ஊரடங்கு அமலுக்கு வந் துள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் கள் பாதுகாப்புப் பணியில் ஈடுப டுத்தப்பட்டனர். தேவையின்றி வாக னங்களில் வெளியே வரும் நபர் கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ள நிலை யில், 12 சோதனைச் சாவடிகள் உட்பட நகரின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் வருவோரை கண்காணிக்க கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் காவலர்களும், புற நகர்ப் பகுதியில் 1,500 காவலர்களும் பாதுக்காப்புப் பணியில் ஈடுபட்ட னர்.
முக்கிய சாலைகள் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட் டன. மாவட்டத்தில் பால் விற்பனை மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து, இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆள் நட மாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டன. குறிப்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மளி கைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. நகரில் தற்காலிக மாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகள், காந்திபுரம், மேட்டுப்பா ளையம் சாலை, சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள் ஆள் நடமாட் டம் இன்றி வெறிச்சோடி காணப்பட் டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆம்பு லன்ஸ், மருத்துவப் பணியாளர்களின் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங் களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்க ளுக்கு வருவோர் கட்டாயமாக முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட் டது. தடையை மீறி முகக்கவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களி டம் மாநகராட்சி அதிகாரிகள் அபரா தம் விதிக்கும் பணிகளிலும் ஈடுபட்ட னர் என்பது குறிப்பிடத்தக்கது.