அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் 45-ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு தருமபுரி செங்கொடிபுரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மூத்த தோழர் ரத்தினம்மாள் கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்டசெயலாளர் எஸ்.கிரைஸாமேரி, பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.