கோவை, செப். 2 - கோவையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந்து சேவை தொடங்கிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேரு துகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப் பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத் தில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்ட லத்திற்குள் பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் பின் ஜூலை மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் செப்.1 முதல் மாவட்டத் துக்குள் பேருந்து சேவையை தொடங்க வழி காட்டு நடைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 401 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் அரசு வழிகாட்டு நடைமுறைகளின்படி பயணி களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்டு, சானிடைசர் கொண்டு கைகளை சுத் தப்படுத்திய பிறகே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே போல், ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத் திற்கு பிறகும் கிருமி நாசினி தெளித்து பேருந் துகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணி கள் ஏறுவதற்கு தயக்கம் காட்டி வருவதால் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்ட டுள்ளது.
தற்சமயம் 260 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.