ஈரோடு,ஜன 24- ஈரோடு, காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விளைந்து அறுவ டைக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துள்ளது. மேலும், நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந் துள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, ஏரி, குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் போதிய அள வில் நிரம்பியது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்க ளது நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற வற்றை பயிரிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு ஒரு வாய்க்காலில் 3500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகழ்ச்சி தெரிவித்துள்ளனர்.