கோவை, பிப். 26– மோடி, அமித்சா, பாஜக ஆட்சியின் ஒவ்வொரு நொடியும் நாடு ஆபத்தில் உள்ளது. இவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற ஒன்றுபட்ட போராட்டத்தை வலு வாக நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது என சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங் கள் நடைபெற்று வருகிறது. குறிப் பாக, தமிழகத்தில் பல்வேறு பகு திகளில் இஸ்லாமிய அமைப்பி னர் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை ஆத் துப்பாலத்தில் அனைத்து இஸ் லாமிய அமைப்புகள் சார்பில் ஷாகின்பாஃக் எனப்படும் தொடர் காத்திருப்பு போராட்டம் ஏழாவது நாள் நள்ளிரவிலும் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு மத்திய அர சுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வரு கின்றனர். இப்போராட்டத்தை ஆதரித்து செவ்வாயன்று மார்க் சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவரு மான உ.வாசுகி மற்றும் மாதர் சங்கத்தினர் பங்கேற்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். முன்னதாக, இக்கூட்டத்தில் உ.வாசுகி பங்கேற்று உரையாற் றுகையில், குடியுரிமை திருத்த சட் டம் மற்றும் என்பிஆர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இற்காக போராடும் மக்களுக்கு தங்களைப் போன்ற அமைப்புகள் எப்போ தும் ஆதரவாக இருக்கும். என்பி ஆர் மற்றும் என்ஆர்சி கணக் கெடுப்பில் உள்ள ஆபத்து குறித்த துண்டறிக்கையை தயாரித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் வீடுவீடாக விநியோ கம் செய்ய உள்ளோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுப வர்கள் மீது அடக்குமுறையுடன் நடத்திய துப்பாக்கி சூட்டால் பலர் பலியாகியும், ஏராளமானோர் படு காயமடைந்துள்ளனர். ஆகவே, நீதிமன்றம் உடனடியாக தலை யிட்டு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். அறவழியில் அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தை காவல் துறையை கொண்டு தடுத்து நிறுத்தி விடலாம் என அரசு நினத்தால் அது நடக் காது. மேலும், தமிழக அரசு போராடு பவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு போராட்டம் நடத்த அனு மதிக்க வேண்டும். இந்த தேசத்தில் பிறந்தாலோ, 11 ஆண்டுகள் இங்கு வசித்தாலே குடிமக்கள் என்கிறது அரசியல் சாசனம். மதத்தை பொருத்துத்தான் குடியுரிமை என்று எக்காலத்திலும் நமது அர சியல் சாசனம் சொல்லவில்லை. நமது அரசியல் அமைப்பின் அடிப் படையே மதச்சார்பின்மைதான். அதனையே தகர்க்க முயற்சிக்கின் றனர். மக்கள் மத்தியில் பிளவு ஏற் படுத்தப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள் பறிக்கப்படுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடிகள் ஏற் பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்கிற வலுவான அரசியல் கோரிக் கையை முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது என்பிஆர், என்ஆர்சி சட் டத்திற்காக மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக இந்த அரசின் கொள் கையால் நாற்பதாண்டு இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வேலையின்மை உச்சகட்டத்தில் அதிகரித்துள்ளது. விவசாயிக ளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. மோடியும், அமித்சா வும், பாஜகவும் ஆட்சியில் இருக் கிற ஒவ்வொரு நொடியும் ஆபத்து. ஆகவே இந்த தேசத்தை பாது காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.