சென்னை, டிச.15- குழந்தைகளுக்கும் பெண்க ளுக்கும் பாதுகாப்பு அளிக்கத்த வறிய மத்திய-மாநில அரசுகளை விரட்டியடிக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி அறைகூவல் விடுத்துள்ளார். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2ன் மகளிர் துணைக்குழு சார்பில் எல்ஐசி உழைக்கும் மகளிர் வெள்ளி விழா மாநாடு சனிக்கிழமையன்று அண்ணா நகரில் நடைபெற்றது. மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் வி.அனுஜா வர வேற்புரையாற்றினார். அமைப்பாளர் கே.துளசி வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாநாட்டில் கல்வி போதனைப்பணியில் முத்திரை பதித்துவரும் பேராசிரியர் சஸீதா, ஆசிரியர்கள் அ.அரவிந்த், அசோகன் உள்ளிட்ட முன்னாள் சங்க அமைப்பாளர்கள் கவுரவிக்கப்பட்ட னர். இணைச் செயலாளர் எம்.கிரிஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.விஜயா, பொதுச் செயலாளர் எம்.தனசெல்வம், எஸ்.எஸ்.கீதா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசுகையில்,“அரசுப் பள்ளிகளை தனியார் மயமாக்கும் நடை வடிக்கைகளில் அரசு ஈடுபட்டி ருக்கும் போது, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கு தேவை யான கட்டமைப்பு வசதிகளை காப்பீட்டுக்கழக ஊழியர்கள் செய்து வருவது பாராட்டுக்குறியது” என்றார். பெண்கள், குழந்தைகள், தொழி லாளர்கள், விவசாயி, விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி கள், சிறுபான்மையினர், பிற்படுத்த ப்பட்டோர் என அனைவரின் பாது காப்பும் தற்போது இந்தியாவில் கேள்விக்குறியாக உள்ளது என்றும் அவர் கூறினார். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை ஆய்வு செய்து வெளியிடும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2015ல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2016ல் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை. மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள். அதே போல் வரதட்சணை கொடுமை யால் கொல்லப்படும் பெண்கள் ஒரு நாளைக்கு 28 பேர். ஒரு மணி நேரத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அவசரகாலநிலையாக மாறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படுகிற சமத்துவ கருத்துக்கள் காற்றிலே பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள், குழந்தைகளுக்கெதிராக அதிக வன்முறையில் ஈடுப்பட்ட கட்சியாக பாஜக இருக்கிறது. இப்படிப்பட்ட முறைகேட்டை, சீரழிவை செய்தவர் என்னுடைய கட்சியின் உறுப்பினராக, சட்டமன்ற, மக்களவை உறுப்பினராக, அமைச்சாராக இருக்க முடியாது என்ற விதிமுறைகளை கொண்டுவர வேண்டுமா இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். இணைச் செயலாளர் ஆர்.சர்வமங்களா தலைமையில் நடை பெற்ற குடும்ப விழாவை எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் நாட்டுப்புற கலைகளின் மேன்மையை விளக்கி பேசினார். தென்மண்டல பொதுச் செயலாளர் த.செந்தில் குமார் வாழ்த்துரையாற்றினார். விழாவில் கண்காட்சி, நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிறைவாக ஆர.சிந்துஜா நன்றி கூறினார்.