கோவை, அக். 24- தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில் ரேசன் கடை களில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்க வலியுறுத்தி கோவையில் பருப்பில்லாத பாயா சம், சர்க்கரை இல்லாத கேசரி செய்து மாதர் சங்கத்தினர் வியாழனன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா கூறு கையில், தொழில் நசிவு மற்றும் பொருளாதார மந்த நிலை காரண மாக தொழில் நகரான கோவையில் மக்கள் கையில் பணமில்லாமல் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றனர். இதன்கார ணமாகவே கோவை நகர கடை வீதிகளில் பண்டிகை காலத்தில் கூட கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் தீபாவளி பண்டிக்கை வர உள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் கடைவீதியாய் இருக்கிற ரேசன் கடைகளில் இதுவரை பொது மக்களுக்கு வழங்க கூடிய அத்தியா வசிய பொருட்களான பருப்பு, சர்க் கரை, எண்ணை போன்றவை வழங் கப்படவில்லை. அவற்றை உடன டியாக வழங்க கோரி அரசின் கவ னத்தை ஈர்க்க நூதன போராட் டத்தை நடத்தியுள்ளதாக தெரிவித் தார். முன்னதாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காட் டூர் மாதர் சங்க அலுவலகம் முன்பு உள்ள சாலையில் பருப்பில்லாத பாயாசம் மற்றும் சர்க்கரை இல் லாத கேசரி, எண்ணையில்லாத வடை ஆகியவற்றை சமைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், டாஸ்மாக் விற்ப னைக்கு இலக்கு நிர்ணயம் செய்த அதிமுக அரசு, சாதாரண மக்க ளின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவில்லை என குற் றம்சாட்டியும், ரேசன் கடைகளில் விரைந்து சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யும் முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மாதர் சங் கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, கிழக்கு நகர தலைவர் வனஜா நடராஜன், செயலாளர் சுதாராமர் உள்ளிட்ட மாதர் சங்கத் தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.