tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் ஆபத்தான கட்டிடம் இடிப்பு

பொள்ளாச்சி, ஜூன் 12-  தீக்கதிர் நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக பொள் ளாச்சியை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில்  பாதியளவு இடிக்கக் பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் முழுமையாக  இடிக்கப்பட்டது.  கோவை மாவட்டம், பொள் ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றி யத்திற்குட்டபட்ட  தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் 80க்கும் மேற் பட்ட மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடத்தின் ஒரு பகுதி கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கடந்த 2017  ஆம் ஆண்டு செப். மாதத்தில் இடிக்கப்பட்டது. அதேநேரம், இக் கட்டிடத்தின் ஒருபகுதி அகற்றப் படாததால் கட்டிட கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு மாண வர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்து வந்தது. இதன் காரண மாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகுந்த அச்சத்து டனே பள்ளிக்கு அனுப்பி வந்த னர். இதனால் மாணவர்கள் விளை யாட்டு நேரத்திலும் கூட பள்ளி மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்பபடவில்லை.   ஆகவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆபத்தான கட்டிடத்தை முழுமை யாக அகற்றுமாறு பள்ளி ஆசிரியர்கள்,  ஊர் பொதுமக்கள் சார்பில் பல முறை வடக்கு ஊராட்சி ஒன்றியத்திலும்,  முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொள்ளாச்சி கல்வித் துறை அதிகாரிகளிடமும்  கடந்த ஓராண்டிற்கும் மேலாக கோரிக்கை வைக்கப்பட்டும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.   இந்நிலையில், இந்த ஆபத் தான கட்டிடம் குறித்து  தீக்கதிர் நாளிதழில் கடந்த சில தினங் களுக்கு முன்பு செய்தி வெளியா னது. இந்த செய்தியின் எதிரொலி யாக  பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆபத்தான கட்டிடத்தை முழுமை யாக இடிக்கும் பணி கடந்த சில  நாட்களாக நடைபெற்றது. தற் போது அக்கட்டிடம் முழுமை யாக இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. இதனால் அப் பள்ளியில் பயிலும் மாணவர் கள், பெற்றோர் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர்.  அதேநேரம், புதியதாக பள் ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற் கான நிதி இன்னும் ஒதுக்கப்பட வில்லை. இதனால் சுற்றுச்சுவர் இன்றி பள்ளி காணப்படுகிறது. அதுவும் பள்ளிக் கட்டிடம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந் துள்ளதால் மாணவர்களின் பாது காப்பு கருதி சுற்றுச்சுவர் உடன டியாக அமைத்துதர வேண்டும்.  இதேபோல், பள்ளிக்கு தேவை யான அடிப்படைத் வசதிகளான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை செய்து தர கல்வித்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந் துள்ளது.