கோவை, ஆக. 23- மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித் திருப்பது சுகாதாரத் துறையினருக்கு சவாலான விஷயம் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோவை அரசு மருத்துவமனை யில் பிளாஸ்மா வங்கி துவக்கி வைக் கப்பட்டுள்ளது.
தற்போது வரை கோவை மாவட்டத்தில் கொரோனா வால் பாதித்த 8 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர். குணமடை வோரின் விகிதம் 78 சதவிகிதமாக உள்ளது. 6 ஆயிரத்து 312 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 100 மருத்துவ முகாம் கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மற்றும் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 5 ஆயிரத்து 821 படுக்கை வசதிகள் உள் ளது. கொரோனா நோய்த்தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம். ஒரிரு வாரங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மற்றும் குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய் யப்பட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதாரத்துறை யினருக்கு சவாலான விஷயமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் நோட்டீஸ் வழங்கப்படும். தமிழ்நாட் டில் 25 சித்தா மருத்துவ மையங்க ளில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. அனைத்து மாவட் டங்களிலும் ஒரு சித்த மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும். கொரோனா உயிரி ழப்புகள் அதிகரிக்க இணை நோய்கள் மற்றும் பிற நோய்கள் இருப்பதே கார ணம் என்றார். முன்னதாக, இந்த ஆய்வின்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி உள்ளிட்ட அரசுத்துறை அதி காரிகள் பலர் உடனிருந்தனர்.