tamilnadu

img

அரசுக் கல்லூரியில் சுழற்சி முறையை ரத்து செய்யாதே - இந்திய மாணவர் சங்கம் மனு

கோவை, மே 28 -  சுழற்சி முறையில் கல்வி பயி லும் முறையை ரத்து செய்யும் கல்வித்துறையின் முடிவால் ஏழை  எளிய மாணவர்கள் பாதிப்புக் குள்ளாவர்கள் என கோவை மாவட்ட கல்லூரி இயக்குநகரத் தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். கோவை, ரேஸ்கோர்ஸ் சாலை யில் உள்ள கல்விக் கல்லூரி  அலுவலகத்தில் இணை இயக்கு குநரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசார் மற்றும் மாவட்டச் செய லாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கல்லூரி  கல்வி இயக்குநரகம் சுழற்சி முறையில் பயிலும் முறையை ரத்து செய்து அறி விப்பை வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். வெளிமாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள் விடுதி யில் தங்கி கல்லூரியில் சுழற்சி  முறையில் பயின்று வருகின்ற னர். இவர்கள் குடும்ப நெருக்கடி காரணமாக இவர்கள் படித்துக் கொண்டே சிறு,சிறு வேலைகளை  பார்த்து வருகின்றனர். இந்நிலையில்,  சுழற்சி முறையை  ரத்து செய்வதன்மூலம் சாதாரண ஏழை,எளிய மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். மேலும்  இதனை வாய்ப்பாக பயன் படுத்திக்கொண்டு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரித்து கட் டணக் கொள்ளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. கிராமப்புற எளிய மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதோடு அவர்களின் உயர்கல்விக் கனவும் சீர்குலையும். சுழற்சி முறை ரத்து செய்வதால் இடைநிற்றல் அதிகரிக்கும். ஆகவே சுழற்சி முறையை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும், இவ்வாறு மனு வில் குறிப்பிடப்படுள்ளது.