tamilnadu

img

அரசாணை 92-ஐ தனியார் கல்லூரிகளில் அமலாக்குக

கோவை, ஜூலை 9- தனியார் கல்லூரிகளில் அர சாணை 92ஐ அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.  கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஆர்.வி.எஸ் கல்லூரி மற்றும் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன்பின் அவர் கள் கூறுகையில், கோவை மாவட் டத்தில் பெரும்பாலான தனியார் கல் லூரிகளில் எஸ்சி, எஸ்டி கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் முழுவதும் இலவசம் என்ற உரிமைகளை வழங் கக்கூடிய அரசாணை 92 அமல் படுத்தப்படவில்லை. அண்மையில் தனியார் கல்லூரியான ஆர்.வி.எஸ் கலைக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த தும், கட்டணம் கட்ட இயலாத மாணவர்களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பியதைக் கண்டித்து  கடந்த 5ம் தேதி ஆட்சியர் அலு வலகத்தில் போராட்டம் செய்து கைதாகினோம். இந்த புகார் அளித்ததை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்களைப் பழி வாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல் பட்டு வருகிறது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தாகத் தெரிவித்தனர். இதில் மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் காவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.